நடுத்தர அளவுடைய விக்கிமீடியா செயல்திட்டங்களில் கட்டுப்பாட்டாளர் கருவிகள் / உள்ளடக்க கட்டுப்பாடு
2021/22-இல், நடுத்தர அளவுடைய விக்கிமீடியா செயல்திட்டங்களில் உள்ளடக்க கட்டுப்பாட்டாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள Moderator Tools குழு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பக்கம் இறுதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் சுருக்கத் தொகுப்பைக் கொண்டுள்ளது, நீங்கள் இதை முழுமையாக இல் படிக்கலாம்.
இந்த அறிக்கையில், ‘உள்ளடக்க கட்டுப்பாடு’ என நாங்கள் குறிப்பிடும்போது, ஒரு விக்கிமீடியா செயல்திட்டத்தின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைக் குறிப்பிடுகிறோமே தவிர, உள்ளடக்கத்துக்கான நேரடிப் பங்களிப்புகளைக் குறிப்பிடுவதில்லை. இது புதிய திருத்தங்களை ரோந்திடுவது, பக்கங்களை நீக்க அல்லது பாதுகாக்க நிர்வாகி கருவிகளைப் பயன்படுத்துவது, எழுதுதல் கொள்கைகள் மற்றும் குறியிடுதல் பணிகளை வகைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள முடிவுகள் உங்கள் தேவைகளுடனும், விக்கிமீடியா செயல்திட்டத்தில் உங்கள் சூழ்நிலையுடனும் பொருந்துகின்றதா, இல்லையா? நாம் என்ன தொழில்நுட்பத் திட்டங்களில் வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது புரிதலை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள பேச்சுப் பக்கத்தில் நாம் அதைத் தெரிந்துகொள்ளலாம்.
எங்களுடைய முதலாவது சுற்று ஆராய்ச்சியிலிருந்து மொபைல் இணையத்தின் உள்ளடக்கக் கட்டுப்பாடு உள்ளடக்க கட்டுப்பாட்டாளர்களின் பிரதானப் பிரச்சனையாக விளங்குவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அடுத்து வரும் மாதங்களில் மொபைல் இணைய இடைமுகத்தில் மேம்பாடுகளை மேற்கொள்வதற்கான வேலையைத் தொடங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். Please see Content moderation on mobile web for information and questions we have about potential improvements to mobile web.
ஆராய்ச்சி மற்றும் நேர்காணல்கள்
இந்த ஆராய்ச்சி “நடுத்தர அளவு கொண்ட” விக்கிமீடியா செயல்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றது. தமிழ் மற்றும் உக்ரேனியன் விக்கிபீடியா செயல்திட்டங்களில் உள்ளடக்கக் கட்டுப்பாடு பற்றிப் புரிந்துகொள்வதில் குறிப்பாக கவனம் செலுத்தும் நோக்கத்துடன், அளவின் அடிப்படையில் முதல்~10 இடங்களைப் பெறாத செயல்திட்டங்களின் தொகுப்பாளர்கள்களை நாங்கள் முக்கியமாக நேர்காணல் செய்தோம். நாங்கள் நேர்காணல் செய்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு செயல்திட்டத்தில் முக்கிய நிர்வாகிகளாக இருந்தார்கள், ஆயினும் ரோந்திடுபவர்கள், மேலாளர்கள் மற்றும் கருவி உருவாக்குபவர்கள் ஆகியோருடனும் நாங்கள் பேசினோம்.
பலதரப்பட்ட சமுதாய உறுப்பினர்களுக்கான தேவைகளுக்குத் தீர்வு காண்கின்ற தயாரிப்புகள் மீது இறுதியில் நாங்கள் செயல்படுவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ள அதே சமயம், எங்கள் ஒட்டுமொத்த இலக்கை வரையறுக்கும்போது பின்தங்கிய சமூகங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்த விரும்பினோம், ஏனெனில் இவை கடந்த காலத்தில் தயாரிப்பு முதலீட்டைப் பெறவில்லை மற்றும் இவை இடைவெளிகளை நிரப்புவதற்கு குறைவான தொழில்நுட்ப தன்னார்வலர்களையே கொண்டுள்ளன.
முடிவுகள்
முக்கிய தொழில்நுட்பத் தடைகள்
நாங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், நாங்கள் நேர்காணல் செய்த உள்ளடக்கக் கட்டுப்பாட்டாளர்களில் யாருமே மொபைலில் உள்ளடக்கப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மொபைல் இணையப் பக்க பார்வைகள் (87%) மற்றும் மொபைல் தொகுப்பாளர்களை (45.2%) அதிக விழுக்காடு கொண்டுள்ள தமிழ் விக்கிபீடியாவில் கூட, நாங்கள் பேசிய நிர்வாகிகள் யாருமே மொபைலில் வழக்கமாக தொடர்ந்து திருத்தம் மேற்கொள்ளவில்லை. ஏன் என்பதற்கான காரணம் மிகத் தெளிவாகத் தெரிந்தது: மொபைலில் கட்டுப்பாடு என்பது நடைமுறையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஒரு பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடில் இருந்து திருத்தங்களைச் செயல்தவிர்ப்பது போன்ற, டெஸ்க்டாப் இடைமுகம் வாயிலாகக் கிடைக்கின்ற பல அடிப்படை அம்சங்களை இது கொண்டிருக்கவில்லை. மேலும், இந்த அம்சங்கள் காணப்பட்டாலும் கூட அவை பொதுவாக மொபைலுக்கு ஏற்புடையதாக இல்லை. ஸ்மார்ட்ஃபோன்கள் மிகப் பொதுவான கணிப்பு சாதனமாக விளங்கும் சமுதாயங்களில், அல்லது அவசரநிலைகள் அல்லது நெருக்கடிகள் காரணமாக டெஸ்க்டாப்கள் அல்லது மடிக்கணினிகளுக்கான அணுகல் இடைவிட்டுக் கிடைக்கக்கூடிய அல்லது நம்பகத்தன்மையற்றதாக உள்ள இடங்களில் இது அணுகல் அல்லது சமத்துவப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கூடுதலாக, கட்டுப்பாட்டுக் கருவிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவையாகவும் கண்டறிவதற்குக் கடினமானவையாகவும் இருப்பது அரிதாகவே உள்ளது. பராமரிப்புக் குறியிடுதல் மற்றும் ஒரு நீக்கலுக்கான வாக்கெடுப்புக்காகப் பரிந்துரைத்தல் போன்ற செயல்முறைகளில் ஈடுபடுவது தெளிவற்றதாக உள்ளது மற்றும் இதற்கு வழக்கமாக பல படிநிலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் நேர்காணல் செய்தவர்களால் கோரப்பட்ட சில அம்சங்கள் தலைப்பு தடுப்புப்பட்டியல் மற்றும் முறைகேட்டு வடிகட்டி போன்ற கருவிகளால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் பரவலாகக் கிடைப்பதில்லை, அல்லது நிர்வாகிகள் தாங்களே சுயமாக அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்குப் போதுமான அளவு அவை நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை என்பதை இது குறிப்பிடுகிறது. இதற்கு மேலாக, இந்தக் கருவிகளில் சில மிகவும் சக்தி வாய்ந்தவையாக விளங்குவதால் இவை பயங்கரமான எதிர்பாராத தீங்கு விளைவிப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. அதிகமான உள்ளார்ந்த ஆபத்து மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பாதுகாப்பாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாதது ஆகியவற்றின் காரணமாக புதிய நிர்வாகிகளால் இதை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டலாம்.
முக்கிய சமூகத் தடைகள்
கிட்டத்தட்ட எங்கள் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு பதிலளித்தவரும் தங்கள் செயல்திட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மிகுதியான வேலைப்பளு மற்றும் குறைவான பணியாளர்கள் இருப்பதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். நிர்வாகப் பண்பைப் பெறுவதற்கு புதிய நிர்வாகிகளைக் கண்டுபிடிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் ஒரு பெரிய தடையாக இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். கூடுதலாக, எங்களால் நேர்காணல் செய்யப்பட்ட உக்ரேனிய விக்கிபீடியாவைச் சேர்ந்தவர்கள் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக்காட்டினர். நிர்வாகிகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளைப் பெறுகிறார்கள், ஆனால் அவற்றை எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதலை சிறிதளவே பெறுகிறார்கள். இது சாத்தியமான நிர்வாகி வேட்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு வாக்களிக்கும் பரந்த சமுதாயம் ஆகிய இருவருக்குமே தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல உள்ளடக்கக் கட்டுப்பாட்டுப் பணிகள் எந்த அளவுக்கு கண்ணுக்குப் புலப்படாதவையாக இருந்தன என்பது மற்றொரு ஆய்வுப் பொருளாக உள்ளது, அவற்றைச் செயல்படுத்துவது குறைவான பலனைத் தருவது போன்ற உணர்வுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான நிர்வாகப் பணிகளின் கண்ணுக்குப் புலப்படாத நிலை நிர்வாக வேலையை தாங்களாகவே செய்துகொள்வது பற்றிச் சிந்திக்க தொகுப்பாளர்களை ஊக்குவிப்பதில் ஏற்பட்ட சிரமத்திற்குப் பங்களித்திருக்கலாம் என்பது இதில் உள்ள உள்ளார்ந்த விஷயமாக இருந்தது. மேலும் இது, தங்கள் சொந்த வேலையை மீளாய்வு செய்ய விரும்பும் நிர்வாகிகளுக்கு, அல்லது நிர்வாகியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முயற்சிக்கின்ற ஒருவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் நிர்வாக நடவடிக்கைகள் பற்றிய தரவுகளைப் பெறுவது கோட்பாட்டளவில் சாத்தியமானதாக இருந்தாலும் அதை உடனே நடைமுறைப்படுத்துவது சிரமமானதாக உள்ளது. எனவே, என்ன வகையான நடவடிக்கைகள் மிகவும் பொதுவானவை என்பதை அறிவதும், அவற்றின் தாக்கத்தை மதிப்பிடுவதும் ஒருவருக்கு சிரமமானதாக உள்ளது.
விக்கி மூலம் கட்டுப்படுத்துதல் திறனை வகைப்படுத்துதல்
செயல்திட்டத்தின் அளவைப் பொருத்து உள்ளடக்க கட்டுப்பாட்டாளரின் தேவைகள் மாறுபடுகின்றன, மற்றும் நிர்வாகக் குழு சிறியதாக இருப்பதால் அந்த சமுதாயத்தில் குறைவான பணியாளர்கள் இருப்பதாக அர்த்தம் ஆகாது. எனவே, விக்கிகளை அவற்றின் நிர்வாகத் திறனின் அடிப்படையில் வகைப்படுத்துவது அவற்றின் நிர்வாகி பயனர் குழுவின் அளவைக் கணக்கிடுவதை விட அல்லது ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் எண்ணிக்கையைப் பார்ப்பதை விட மிகவும் சிக்கலானது. நாங்கள் தீர்மானித்த அளவீடுகள் மாதாந்திர செயலாற்றும் திறமையுள்ள நிர்வாகியை மாதாந்திர செயலாற்றும் திறமையுள்ள தொகுப்பாளருக்கும் தலா மாதத்திற்கு மேற்கொள்ளும் திருத்தங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்துடன் ஒப்பிடுவது மற்றும் விக்கியின் கொள்கைகளை ஒரு சில பொதுவான பகுதிகளில் மீளாய்வு செய்வது ஆகியவற்றைக் கொண்டவையாக இருந்தன. பொதுவான உள்ளடக்கக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளில் உள்ளடங்குவன:
- விரைவான நீக்கம்
- நீக்கலுக்கான வாக்கெடுப்பு
- நிர்வாகி தேர்தல் மற்றும் நீக்குதல் நடைமுறைகள்
பெரும்பாலான சிறிய விக்கிகள் உள்ளடக்க கட்டுப்பாட்டுத் தலைப்புகள் மீது தீர்மானிக்கப்பெற்ற கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை (பக்கத்தை நீக்குதல் போன்ற செயல்பாடுகளை அவர்கள் மேற்கொண்டு வந்தாலும் கூட), அல்லது பெரிய விக்கிகளிடம் இருந்து அவற்றை சொல்லுக்கு சொல் நகல் செய்யவில்லை என நாங்கள் தீர்மானித்தோம். எனவே, அத்தகைய கொள்கைகளை வடிவமைக்கத் தேவையான திறனை வளர்த்துக்கொள்வதை (கொள்கையை மாற்றியமைத்தல் மற்றும் விக்கியின் மொழிக்கு அதை மொழிபெயர்த்தல் இரண்டு வகையிலும்) கட்டுப்பாட்டுத் திறனின் வளர்ந்துவரும் சமிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
இதோடு, பெரும்பாலான மொபைல் தொகுப்பாளர்களின் சதவீதம், விக்கியின் கட்டுரை எண்ணிக்கை மற்றும் செயல்திட்டத்தின் புவியியல் மற்றும் மொழி உள்ளடக்கப் பரப்பு போன்ற பிற சிறப்பியல்புகளையும் நாங்கள் பார்த்தோம். நெருங்கிய தொடர்புடைய விக்கிகளிடமிருந்து (மொழி அல்லது கலாச்சாரம் மூலம்) கொள்கையை கடன் வாங்குவது ஒரு பொதுவான நடைமுறையாக இருப்பதால் கலாச்சார ரீதியாக ஒத்த தன்மை கொண்ட கூட்டாண்மையர் விக்கிகளைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் தவிர்க்க விரும்பினோம் மற்றும் இந்த அறிக்கைக்காக இரண்டு வெவ்வேறு கட்டுப்பாட்டுச் சூழல்களை நாங்கள் ஒப்பிட விரும்பினோம்.
தயாரிப்பு பரிந்துரைகள்
மொபைல் இணையத்திலிருந்து உள்ளடக்கக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதே எங்கள் முதன்மையான தயாரிப்பு பரிந்துரையாக இருக்கும். மிக அடிப்படையான பணிகளுக்குக் கூட மொபைலில் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது என்ற எங்கள் முக்கியமான கண்டுபிடிப்பிலிருந்து நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். இது புதிய நிர்வாகிகளுக்கு பங்கேற்பதற்கு ஒரு தடையாக உள்ளது, மேலும் பல வளர்ந்துவரும் சமுதாயங்களுக்கு சமத்துவப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும் உள்ளது. விக்கிமீடியா செயல்திட்டங்களுக்குப் பங்களிப்பவர்களில் நான்கில் ஒருவர் முக்கியமாக ஒரு மொபைல் சாதனத்திலிருந்து திருத்தங்களை மேற்கொள்கின்றனர், சில வளர்ந்துவரும் சந்தைகளில் இந்த எண்ணிக்கை 40-60% வரை அதிகரிக்கிறது. இந்தத் தொகுப்பாளர்கள் மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் சாதனங்களுக்கான அணுகலைப் பெற்றிராததன் காரணமாக மேம்பட்ட திருத்துதல் அல்லது கட்டுப்பாட்டில் அர்த்தமுள்ள முறையில் பங்கேற்க முடிவதில்லை. ஸ்மார்ட்ஃபோன் ஒரு முதன்மைச் சாதனமாக இல்லாத கட்டுப்பாட்டாளர்களுக்குக் கூட அவை பொதுவாக இரண்டாம் நிலை கணிப்புச் சாதனங்களாக விளங்குகின்றன, எனவே டெஸ்க்டாப்பை பிரதானமாகப் பயன்படுத்தும் தொகுப்பாளர்களுக்கும் மொபைல் கட்டுப்பாடு என்பது பயனுள்ளதாக இருக்கும்.
டெஸ்க்டாப் திருத்துதல் அனுபவத்திற்கு இணையாக மொபைலில் உள்ளடக்க கட்டுப்பாட்டு செயல்பாட்டைக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ஆகும். We would do so by building on the Advanced Mobile Contributions project, and incorporating these features into the default experience - with improved user interfaces where needed - rather than requiring editors to opt-in to an advanced editing mode.
மொபைல் இணைய இடைமுகத்தில் பணிபுரிவது இந்த இடத்தில் கூடுதல் வேலை செய்வதற்கான ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக இருக்கும். எளிதில் அணுகத்தக்க தன்மை மற்றும் கண்டறியும் திறன் ஆகியவற்றில் நிலவும் பிரச்சனைகள் இங்கு வலியுறுத்தப்படுகின்றன, இது பிற சவால்களைத் தீர்ப்பதற்கான கருதுகோள்களை உருவாக்க அதை ஒரு சிறந்த வழியாக ஆக்குகிறது.