மீடியாவிக்கி 1. 19/வெள்ளோட்ட அறிவிப்பு
இச்செய்தி முதலில் Wikimedia Tech blog. வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. இது போன்ற அறிவுப்புகளைப் பெற இந்தத் தொழில்நுட்ப வலைப்பதிவின் சந்தாக்காரராகலாம் RSS ஓடையாகப் பெறலாம்
விக்கிமீடியா தளங்களில் மீடியாவிக்கி 1. 19 வெள்ளோட்டம்: தடங்கல் ஏற்படும் முன் சோதித்துப்பார்
விக்கிப்பீடியாவையும் அதன் உறவுத் தளங்களையும் இயக்கும் மென்கலமாகிய மீடியாவிக்கியின் மேம்படுத்தப்பட்டப் மிகப் புதிய பதிவுக்கு மாற்ற விக்கிமீடீயா பொறியாளர்கள் கடைசி மெருகுகள் ஏற்றிக்கொண்டிருக்கின்றார்கள்
அண்மையில் நாங்கள் பீட்டாக் குழுவை அமைத்து தேர்ந்த சில விக்கிப்பீடியா விக்கிகளை மாற்றுப்படியாக்கி, அந்தப் புதுப்பதிவை மாறுபடும் உள்ளகச் சூழல் விக்கிகளில் விக்கிமீடியர்கள் சோதித்துப் பார்த்த பொழுது அறிவுடன் எதிர்பார்த்த அளவு நன்கு வேலை செய்தது.
நிலைமை நன்றாகவே இருக்கின்றது, இப்பொழுதுள்ள திட்டத்தின் படி "பிப்பிரவரி 15 முதல் மார்ச்சு 1, 2012 உக்கு இடையில்" ஐந்து படிநிலைகளில் வெள்ளோட்டம் விடப்படும். எதிர்பாரா சிக்கல்களால் இந்தக் காலத்திட்டம் மாறலாம், எனவே எப்பொழுது உங்கள் விக்கியில் மாற்றங்கள் நிகழும் என அவ்வப்பொழுது புதுப்பிக்கப் படும் மீடியாவிக்கி 1. 19 (MediaWiki 1.19) திட்டப்பாதைப்' பார்க்கவும்.
மீடியாவிக்கி 1. 19 தரும் புதிய சிறப்புக்கூறுகளும் வழு நீக்கங்களும் பிற்பகுதியில், திரைக்குப் பின்னே நிகழும் மாற்றங்கள் ஆகும், எடுத்துக்காட்டாக நினைவகத் தளமாக சுவிஃப்ட்டு (Swift) -உக்கு மாறவிருக்கும் சூழல்களுக்கா உள்கட்டுமான வேலைகள்.
மேலும் வெளிப்படக் காணக்கூடிய மேம்பாடுகளும் உள்ளன, எடுத்துக்காடாக நிறவேறுபாடுக் காணற்குறையுடையோருக்கு எளிதாகப் படிக்கும்படியான வேறுபாடுகள் (diff), இடைமுகத்தில் பயனரின் பால், மொழி இவற்றுக்கான மேம்பட்ட ஆதரவு ஆகியவை. எல்லா மாற்றங்களையும் காட்டும் பட்டியல் இங்குள்ளது: draft release notes
ரிசோர்சுலோடர் (ResourceLoader) உடன் சாவாகிறிப்டும் கேட்செட்டும் ( Gadgets) பொருத்தம் உடையதாக உள்ளதா என்று சரிபார்க்கவும்
மீடியாவிக்கி 1. 19 இல் ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டுப் பகுதி சாவாகிறிப்டு பற்றியது. மரபான தள நிரல்கள், பயனர் நிரல்கள், கேட்சட்டுகள் (gadgets) ஆகியவை தொடர்ந்து வேலை செய்யும் என்றாலும், புதிய பதிப்பு முன்போல் நிரலில் உள்ள பிழைகளையும், முற்கோள்களையும் பொருட்படுத்தாமல் ஏற்று செயற்படாமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, விரைந்து தரவேற்றம் செய்யும் பொழுது, அவை பயன்படுத்தும் உள்நிரல் குழுக்களை (module) வெளிப்படையாக அறிவிக்காவிடில் நிரலில் உள்ள பிழைகளை வெளிக் காட்டும்
மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ResourceLoader இன் புதிய பதிப்பு வெள்ளோட்டம் விடபப்டும், இது குறிப்பிட்ட கேட்செட்டுகளுக்கு மேம்பாடுகளைக் கொண்டுவரும், ஆனால் கேட்செட்டுகள் ரிசோர்சுலோடருடன் இணக்கமுடையதாக இருக்கவேண்டும்.
எனவே பெரும் இடைத்தடங்கள் பின்னர் ஏற்படாமல் இருக்க, கேட்செட்டுகளைப் பராமரிப்பவர்கள் அவர்களின் நிரல்களை இப்பொழுதே மேம்படுத்திக்கொள்ள வலுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றார்கள். ரிசோர்சுலோடருக்கு மாறுவதற்கான கையேடு என்பதே கேட்சட்டு மென்பொருளார்களுக்கான முதன்மையான ஆவணம்; சாவாகிறிப்டில் தவிர்க்கப் பரிந்துரைப்பவை, முதலிருப்பு உள்பகுதிகள் (default modules) ஆகியவற்றுக்கான பட்டியல்களும் கிடைக்கின்றன.
2011 பயன்பாடு வழிகாட்டல் (Resource Walker) நிகழ்வில் கலந்து கொண்டு எல்லா விக்கிமீடியா விக்கிகளையும், காலம்கடந்த சாவாகிறிப்டுகளையும் மேம்படுத்தலாம். இதனை ஒழுங்குபடுத்த ஒரு IRC பட்டறையும் திட்டமிடப்பட்டுள்ளது; பின்னர் இவ்வலைப்பதிவில் மேலும் செய்திகள் இடப்படும்
வெளிப்படையாகத் தெரியும் மேம்பாடுகளை நோக்கி நகர்வு
அடிக்கடி மென்கலன் புதுப்பிக்கும் நிலைக்கு நாம் நகர நகர, அவை மேன்மேலும் குறைந்த இடைஞ்சலும் சலிப்பும் ஊட்டுவதாகவே இருக்கும் என எதிர்பார்க்கின்றோம், ஒரு நிலையில் பயனர்கள் புதுச் சிறப்புக்கூறுகளைக் காண்பார்களே தவிர புதுப்பிப்புகள் நிகழ்வதை அவர்கள் அறியக்கூட இயலாதவாறு மென்சீர்மையுடன் நடக்கும். இன்னும் நாம் அந்நிலையை எட்டவில்லைதான், ஆனால் ஏறத்தாழ கடந்த ஓராண்டளவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம், மென்கலன் உருவாக்குநர்கள், பயனர்கள் ஆகிய யாவருடைய நன்மைக்காகவும் இவற்றைத் தொடர்வதில் உறுதிபூண்டிருக்கின்றோம்.
இடைக்காலத்தில், எங்கள் முயற்சிகளையும் தாண்டி மேம்படுத்தும்பொழுது நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம், எனவே பொருத்தருள்க; எவ்வளவு விரைவாகத் தீர்த்து சரிசெய்ய இயலுமோ அவ்வளவு விரைவாகச் செய்ய முயல்வோம். பீட்டா குழுவுக்கு வருகை தரவும் , அங்குள்ள சிக்கல்கள் பற்றி முறையிடவும், (Archived 2012-01-19 at the Wayback Machine) வழுபதிவு பதிவேட்டில் இடவும் இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. எவ்வளவு அதிகமான பேர் முன்கூட்டியே சரிபார்க்கிறார்களோ, அவ்வளவுக்கும், இடையூறின்றி வெள்ளோட்டம் நடைபெறும்.
Guillaume Paumier
தொழில்நுட்பத் தொடர்பாடலுக்கான மேலாளர்