பேச்சுப் பக்கங்கலின் கலந்தாய்வு 2019/கருத்து பரிமாற்றம்/அறிவிப்பு
This page is obsolete. It is being retained for archival purposes. It may document extensions or features that are obsolete and/or no longer supported. Do not rely on the information here being up-to-date. See Talk pages project for the follow-up project. |
பேசுவதை பற்றி எங்களிடம் பேசுங்கள்
விக்கிமீடியா நிறுவனம் கருத்து பரிமாறுதல் பற்றிய உலகளாவிய கலந்தாய்வு ஒன்றை திட்டமிடுகிறது. இதன் நோக்கம், கருத்து பரிமாறுதலுக்கான கருவிகளை மேம்படுத்துவதற்காக விக்கிமீடியர்கள் மற்றும் விக்கி- நோக்கமுள்ள மக்களை ஒன்று சேர்ப்பதாகும்.
நாங்கள் எல்லா பங்களிப்பாளர்களும் அவர்களின் அனுபவம், அவர்களின் திறமைகள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் வேறுபாடின்றி விக்கியில் ஒருவர் மற்றொருவர் உடன் பேசிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
நாங்கள் முடிந்தவரை விக்கிமீடியா சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்ளீடுகளை தேடுகிறோம். உள்ளீடுகள் பல்வேறு திட்டங்களில் இருந்து, பல்வேறு மொழிகளில் மற்றும் பல்வேறு கண்ணோட்டத்தில் வரும்.
நாங்கள் இப்போது கலந்தாய்வை திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உங்களது உதவி வேண்டும்.
அவர்களது சமூகம் மற்றும் பயனர் குழுக்களுடன் பேசுவதற்கு உதவ எங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை.
நீங்கள் உங்களது விக்கியில் ஒரு கலந்துரையாடலை தொகுத்து வழங்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்றோ உதவலாம். நீங்கள் செய்ய வேண்டியவை:
- முதலில், உங்களது குழுவை பதிவு செய்யவும் அல்லது ஏற்கனவே ஒன்று இங்கே இருக்கிறதா என பார்க்கவும்.
- குழு ஏதும் இல்லையெனில், அடுத்து, உங்கள் குழுவில் இருக்கும் மற்ற மக்களிடம் இருந்து தகவல் சேகரிப்பதற்கு பக்கம் ஒன்றை உருவாக்கவும் (அல்லது ஆலமரத்தடி பக்கத்தில் ஒரு பகுதியை, அல்லது ஒரு மின்னஞ்சல் தொடரை - எது உங்களது குழுவிற்கு இயல்பானதோ அதை செய்யவும்). இது வாக்களிக்கும் அல்லது முடிவெடுக்கும் கலந்துரையாடல் அல்ல: நாங்கள் கருத்து மட்டுமே சேகரித்து கொண்டிருக்கிறோம்.
- அடுத்து, கருத்து பரிமாறும் செயல்முறைகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். விக்கியிலும் விக்கிக்கு வெளியிலும் மக்கள் எவ்வாறு கருத்து பரிமாறுகிறார்கள் என்பது பற்றிய கதை மற்றும் அது தொடர்பான தகவல்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். பின்வரும் ஐந்து கேள்விகளை கேட்பதற்க்கு கருதுங்கள்:
- நீங்கள் உங்களது சமூகத்துடன் ஒரு விஷயத்தை பற்றி கலந்துரையாட வேண்டும் போது உங்களுக்கு உதவும் கருவிகள் யாவை, மற்றும் உங்களுக்கு தடையாக வரும் பிரச்சனைகள் யாவை?
- புதிய பயனர்கள் எவ்வாறு பேச்சுப் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள்? மேலும் அவர்கள் அதை பயன்படுத்துவதை தடுப்பது என்ன?
- உங்கள் சமூகத்தில் இருக்கும் மற்றவர்கள் பேச்சுப் பக்கம் தொடர்பாக சந்திக்கும் சிரமங்கள் யாவை?
- நீங்கள் பேச்சுப் பக்கங்களில் செய்ய விரும்பும் எந்த விஷயங்களை தொழில்நுட்ப வரையறைகளால் செய்ய முடியவில்லை?
- ஒரு "விக்கி கலந்துரையாடலின்" முக்கிய அம்சங்கள் என்ன?
- இருதியாக, மீடியாவிக்கியில் இருக்கும் பேச்சு பக்கங்களின் கலந்தாய்வு 2019 பக்கத்தில் உங்கள் குழிவிடம் இருந்து நீங்கள் தெரிந்து கொண்டதை கூறவும். கலந்துரையாடலின் இணைப்பு பொதுவாக கிடைக்கும் என்றால், அதையும் சேர்க்கவும்.
மேலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும் பல்வேறு விதங்கள் பற்றிய பட்டியலை உருவாக்க நீங்கள் உதவலாம்.
விக்கியிலோ அல்லது விக்கியை சுற்றியோ செயலில் இருக்கும் அனைத்து குழுக்களும் கலந்துரையாட ஒரே வழியை பயன்படுத்துவதில்லை. கலந்துரையாடல் விக்கியிலோ, சமூக வலைப்பின்னல்களிலோ, வெளிப்புற கருவிகளைக் கொண்டோ நடக்கலாம். உங்கள் குழு எவ்வாறு கலந்துரையாடுகிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்.
மீடியாவிக்கியில் நீங்கள் ஒட்டுமொத்த செயல்முறை பற்றி மேலும் படிக்க முடியும். கலந்தாய்வின் செயல்முறையைப் பற்றி உங்களுக்கு கேள்விகளோ அல்லது யோசனைகளோ இருந்தால், நீங்கள் விரும்பும் மொழியில் கருத்து தெரிவிக்க முடியும்.
மிக்க நன்றி! உங்களுடன் பேசுவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.